17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

எழுதியவர்: mohan January 31, 2020, 9:52 am

மதுரை திருப்பரங்குன்றம் சரவணபொய்கை தண்ணீரை சுத்தம் செய்ய புதிய நவீன சுத்திகரிப்பு கருவியை மாவட்ட நிர்வாகம் சார்பில் நிறுவ நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அதற்காக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதோடு அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் மற்ற நீர் நிலைகளையும் சுத்திகரிக்க பண்படுத்தும் வகையில் நகர்த்தும் அமைப்போடு நிர்மாணிக்க ஆவன செய்யுமாறு வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய முறையில் இதனை உடனடியாக பரிசீலிப்பதாக தெரிவித்தார்.மேலும் குடியரசு தின விழாவில் சமூக ஆர்வலர்களுக்கு விருது வழங்கி ஊக்கப்படுத்தியதற்காக மாவட்ட ஆட்சியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.இந்த சந்திப்பில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கோரிக்கை மனு வழங்க அருகில் நம்ம மதுரை அறக்கட்டளை நிறுவனர் ஸ்ரீதரன் மற்றும் மக்கள் தொண்டன் அசோக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!