18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சர்வதேச தடகளப்போட்டி முதுகுளத்தூர் வீரர்கள் தகுதி

சர்வதேச தடகளப்போட்டி முதுகுளத்தூர் வீரர்கள் தகுதி

எழுதியவர்: mohan January 31, 2020, 9:45 am

திருச்சியில் நடந்த தேசிய அளவிலான இளைஞர் ஊரக விளையாட்டு தடகளப்போட்டிகளில் தமிழகம், புதுச்சேரி, உ.பி., ஆந்திரா உள்பட 10 மாநிலங்களைச் சேர்ந்த 1,500க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். இதில் தமிழக அணி வீரர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழக கபடி சீனியர் அணித் தலைவரான ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஏனாதி தட்சிணாமூர்த்தி மகன் தாமரை செல்வன் அதிக புள்ளிகள் எடுத்து தங்கம் வென்றார். இந்த வெற்றி மூலம் தமிழக கபடி அணி சர்வதேச போட்டிக்கு தகுதி பெற்றது. ஏனாதி செல்லமுத்து மகன் அருண் பூபதி, 200 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்றார். இவர்கள் இருவரும் நேபாளத்தில் இந்த மாதம் நடைபெறவுள்ள சர்வதேச தள கபடி, ஒட்டப் போட்டிகளில் கலந்து கொள்கின்றனர். தேசிய போட்டியில் வென்று தமிழகம், ராமநாதபுரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த வீரர்களை ஏனாதி பொதுமக்கள், விளையாட்டு வீரர்கள் பாராட்டினர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!