18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்-ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.!

கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்-ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.!

எழுதியவர்: Askar January 31, 2020, 1:04 am

கடையநல்லூரில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து நடத்திய மாபெரும் மனித சங்கிலிப் போராட்டம்-ஆண்கள் பெண்கள் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு.!

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து அனைத்து அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் இணைந்து நடத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் 30.01.2020 வியாழக்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை கைவிடக் கோரியும், தேசிய குடிமக்கள் பதிவேடு உருவாக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்தியும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டம் ரஹ்மானியாபுரம் 1வது வது தெருவில் இருந்து தொடங்கி கடையநல்லூர் தாலுகா அலுவலகம் வரை ஏராளமான ஆண்கள் பெண்கள் குழந்தைகள் குடும்பத்துடன் பங்கேற்றனர். போராட்டத்தின் போது மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இதில் கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அபூபக்கர் திமுக, காங்கிரஸ் ,முஸ்லிம் லீக்,எஸ்டிபிஐ ,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, அமமுக மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மஸ்ஜிதுல் முபாரக் கமிட்டி ஜமாத்துல் உலமா சபை, ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் உட்பட அனைத்து சமுதாய இயக்கங்களும் இணைந்து கொல்லம் திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையில் மனிதச் சங்கிலியாக அணிவகுத்து நின்றனர்.

இந்த மனித சங்கிலி போராட்டத்திற்கு புளியங்குடி டிஎஸ்பி சக்திவேல் தலைமையில் கடையநல்லூர் காவல் ஆய்வாளர் கோவிந்தன், உதவி ஆய்வாளர் ஜெயக்குமார் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு அளித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!