17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் டெக்னோ கிராப்ட்ஸ் போட்டி…

கீழக்கரை தாசிம் பீவி மகளிர் கல்லூரியில் டெக்னோ கிராப்ட்ஸ் போட்டி…

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2020, 10:53 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை  தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் கணினி அறிவியல் துறை சார்பாக டெக்னோ கிராப்ட்ஸ் 2020 போட்டி நடந்தது. கணினி அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த இப் போட்டியில் ஆறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகள் பங்கு பெற்றனர்.

நிறைவு விழாவில் கீழக்கரை தாசீம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரி வணிகவியல் துறை இணை பேராசிரியர் கே.புவனேஸ்வரி  தலைமை வகித்து போட்டிகளில் வென்ற மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார். காரைக்குடி டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி சுழற்கேடயம் வென்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!