18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காந்தி நினைவு தினம் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

காந்தி நினைவு தினம் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா இராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் January 30, 2020, 10:44 pm

தேசத்தந்தை மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா சார்பில் இந்தியா முழுவதும் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது. இதனொரு பகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா ராமநாதபுரம் நகர் சார்பில் அரசு போக்குவரத்து கழக பணி மனை முன், மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா நகர் தலைவர் முகமது இப்ராகிம் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ., கட்சி மாவட்ட பொதுச்செயலர் பரக்கத்துல்லாஹ் முன்னிலை வகித்தார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹமீது இப்ராஹீம் சிறப்புரை ஆற்றினார். பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர்கள் மன்சூர் அலி (இராமநாதபுரம்), சதக்(காஞ்சிபுரம்)  சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.

இப் போராட்டத்தில்  தமுமுக., தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்., இந்திய தவ்ஹீத் ஜமாத்., அமமுக., சிறுபான்மை அணி, எஸ்டிட்டியு, எஸ்டிபிஐ., கட்சி., சுன்னத் ஜமாத் நிர்வாகிகள் உள்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள் தொகை பதிவேடு, தேசிய குடிமக்கள் பதிவேடு சட்ட அமலாக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன கோஷம் எழுப்பினர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!