இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தீவிர கண்காணிப்பில் 10 பேர்.இதனை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் உறுதி செய்தள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “
கேரளாவைச் சேர்ந்த மாணவர் ஒருவர் சமீபத்தில் சீனாவின் வூஹான் நகரில் இருந்து திரும்பியுள்ளார். அவருக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தி, கண்காணிப்பில் வைத்ததில் அவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர் மருத்துவமனையில் தனி அறையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தியாவிலும் கொரோனா எனும் கொடிய வைரஸ் நுழைந்துள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலால் இந்தியர்கள் அச்சமடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவுவது குறித்து அரசு மிகுந்த எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் எனப் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு வந்தது கொடிய கொரோனா வைரஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு – தீவிர கண்காணிப்பில் 10 பேர்!
எழுதியவர்: mohan January 30, 2020, 4:28 pm




You must be logged in to post a comment.