கடந்த 2018ம் ஆண்டு மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் அரசானையை எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டது சம்பந்தமாக 79 ஆசிரியர்கள் மீது வழக்குபதிவு செய்து, அவர்களின் மீது கல்வித்துறை ஒழுங்கு நடவடிக்கையாக 17பி நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வழக்கினை 2019 பிப்ரவரி மாதம் மதுரை உயர்நீதி மன்றம் மூலம் ரத்து செய்யப்பிட்ட பின்பும் இதுவரை பள்ளிக்கல்வித்துறை 17பியை ரத்துசெய்யவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர்கள் உசிலம்பட்டி மாவட்ட கல்வி அலுவலகத்தில் 17பியை ரத்துசெய்ய வலியுறுத்தி இரண்டாவது நாளாக பணிக்கு செல்லாமல் ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 17பியை ரத்துசெய்யாவிட்டால் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்தனர்.
உசிலம்பட்டியில் 17பியை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள் கூட்டணி சார்பில் ஆசிரியர்கள் இரண்டாது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழுதியவர்: mohan January 30, 2020, 4:09 pm




You must be logged in to post a comment.