நெல்லை மாவட்ட காவல்துறை சார்பில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.! திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தீண்டாமை ஒழிப்பு குறித்து உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி 30.01.2020 வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஓம்பிரகாஷ் மீனா IPS கலந்து கொண்டு உறுதி மொழியை முன்மொழிய அமைச்சு பணியாளர்கள் 90 பேர் தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.
தீண்டாமையை அடிப்படையாகக் கொண்டு எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ, சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடை பிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் அடிப்படை கருத்திற்கிணங்க, சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும், உண்மையுடனும், பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன் என்ற உறுதிமொழி ஏற்கப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்




You must be logged in to post a comment.