17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேவிபட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல்

தேவிபட்டினம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல்

எழுதியவர்: mohan January 30, 2020, 2:20 pm

இராமநாதபுரம் ஒன்றியம் தேவிபட்டினம் ஊராட்சி துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் ஊராட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. 12 உறுப்பினர்களை கொண்ட தேவிபட்டினம் ஊராட்சி துணைத்தலைவர் பதவிக்கு 12 வது வார்டு உறுப்பினர் சேதுராமன், 4வது வார்டு உறுப்பினர் மின்ஹாஜ் பேகம் ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அப்துல் ஜபார் , உதவி தேர்தல் அலுவலர் செல்வராஜ் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.இதில் 9 வாக்குகள் பெற்று துணைத்தலைவராக எம்.சேதுராமன் தேர்வு செய்யப்பட்டார். மின்ஹாஜ் பேகம் 3 வாக்குகள் பெற்றார். ஒரு வாக்கு நோட்டாவில் பதிவானது. ‘துணைத்தலைவராக தேர்வான சேதுராமனுக்கு , ஊராட்சி தலைவர் ஹமீதியா ராணி ஜாகீர் உசேன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் முனியசாமி செய்திருந்தார்.ராமநாதபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் வெள்ளைத்துரை தலைமையில் இன்ஸ்பெக்டர் சாமுவேல் ராஜ்குமார் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!