இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் சாத்தக்கோன்வலசை ஊராட்சி துணைத்தலைவர் மறைமுகத்
தேர்தல் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று (30/01/2020) காலை நடந்தது. 9 உறுப்பினர்களை கொண்ட ஊராட்சி மன்ற துணைத்தலைவர் பதவிக்கு 4வது வார்டு உறுப்பினர் ஹரிஹர சுதன், 8வது வார்டு உறுப்பினர் முத்துமாரி சீனி மாரி ஆகியோர் போட்டியிட்டனர். தேர்தல் நடத்தும் அலுவலர்கள் சேவுகபெருமாள், ராஜேந்திரன், உதவி தேர்தல் அலுவலர்கள் செந்தி-ல் குமார், உமா முனீஸ்வரி ஆகியோர் தேர்தலை நடத்தினர். ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் மகேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் முத்து பிரேம் சந்த் (உச்சிப்புளி), எஸ்ஐ.,கள் நாகராஜன் (மண்டபம்), சிராஜ்தீன் (மண்டபம்), சிறப்பு எஸ்ஐ., செல்லபாண்டியன் (பாம்பன்) ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதில் 5 வாக்குகள் பெற்று முத்துமாரி , துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஹரிஹர சுதனுக்கு 3 வாக்குகள் கிடைத்தன. ஒரு வாக்கு செல்லாத வாக்காக அறிவிக்கப்பட்டது. ‘துணைத்தலைவராக தேர்வான முத்துமாரி சீனி மாரிக்கு , ஊராட்சி தலைவர் நாகேஸ்வரி வீரபத்திரன் மற்றும் இதர வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தேர்தல் ஏற்பாடுகளை ஊராட்சி செயலர் புல்லாணி குமார் செய்திருந்தார்.
சாத்தக்கோன்வலசை ஊராட்சி துணைத்தலைவர் மறைமுகத் தேர்தல் பெண் வெற்றி
எழுதியவர்: mohan January 30, 2020, 12:55 pm




You must be logged in to post a comment.