இராமநாதபுரம் கமுதி அருகே பேரையூர் நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு கல்லுாரி தலைவர் அகமது யாசின் தலைமையிலும், கள்ளிக்குளம் வேளாண் கல்லுாரி பூச்சியியல் துறை பேராசிரியர் அப்துல் ரசாக், மதுரை வேளாண் கல்லுாரி பேராசிரியர் மணிசேகரன் முன்னிலையில் நடந்தது. நம்மாழ்வார் வேளாண் தொழில்நுட்ப கல்லுாரி முதல்வர் சரவணன் வரவேற்றார். நவீன வேளாண் திட்டத்தின் மூலம் விவசாயத்தில் பூச்சிக் கொல்லி மருந்து உபயோகத்தை குறைப்பது, நிலையான வேளாண் திட்டத்தில் இயற்கை விவசாய முறைகள் குறித்து கல்லுாரி பேராசிரியர்கள் பழனிச்சாமி, இபுராஹிம் பேசினர். கருத்தரங்கு சிறப்பு நுாலை கல்லுாரி தலைவர் அகமது யாசின் வெளியிட்டார். தமிழகத்திலுள்ள வேளாண் கல்லுாரிகளில் இருந்து மாணவர்கள் 150 பேர் பங்கேற்றனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை வேளாண் பொறியியல் துறை பேராசிரியர் ராமச்சந்திரன், மாணவர் மன்ற ஒருங்கிணைப்பாளர் பிரவீன், இணை ஒருங்கிணைப்பாளர் காவ்யாவசந்தி செய்தனர்
கமுதி அருகே நம்மாழ்வார் வேளாண் கல்லுாரியில் தேசிய கருத்தரங்கு
எழுதியவர்: mohan January 30, 2020, 11:03 am




You must be logged in to post a comment.