இராமநாதபுரம் மாவட்ட கமுதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவு கல்லூரி பொன் விழாவையொட்டி ரெட் ரிப்பன் கிளப், யூத் ரெட் கிராஸ், நாட்டு நலப்பணித்திட்டம், ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை சார்பில் சிறப்பு ரத்தான முகாம் நடந்தது. கல்லூரி முதல்வர் வே.அருணாசலம் துவக்கி
வைத்தார். கமுதி அரசு மருத்துவமனை டாக்டர் வ.முகமது இர்பான் ஹசான் தலைமையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஊழியர்கள், கமுதி ரெட் கிராஸ் கிளப அலுவலர் ஆயிஷா கனி பணியாற்றினார்.நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ரத்த தானம் செய்தனர். கல்லூரி ரெட் ரிப்பன் கிளப், யூத் ரெட்கிராஸ் கிளப், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் க.ஜெயக்காளை, வாகை எம்.பாண்டியன், உடற்கல்வி இயக்குனர் சிவராம கிருஷ்ணகுமார், போ.பால்பாண்டி ஆகியோர் முகாமை ஏற்பாடுகளை செய்தனர். பேராசிரியர் மாமல்லன், கஜேந்திரன், அலி அல் குதாயா, அலுவலர்கள் பி.சத்தியநாதன், நாகராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்
பசும்பொன் தேவர் கல்லூரி பொன்விழா சிறப்பு ரத்தான முகாம்
எழுதியவர்: mohan January 30, 2020, 10:28 am




You must be logged in to post a comment.