17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.!

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.!

எழுதியவர்: Askar January 30, 2020, 9:32 am

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.!

குடியரசு தின விழாவன்று டெல்லி ராஜபாதையில் முப்படை வீரர்களும் அணிவகுத்து சென்றனர். அந்த படைகள் மீண்டும் திரும்பி வருவதே பாசறை திரும்பும் நிகழ்வாகும். குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் 4 நாளின் இறுதி நிகழ்ச்சியாக இது கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

டில்லி விஜய் சவுக் பகுதியில் நடைபெற்ற பாசறை திரும்பும் நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் ராம்நாத்கோவிந்த், குடியரசு துணை தலைவர் வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திரமோடி உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர்.

முப்படைகளின் 14 இசைக்குழுவினர் பாண்டு வாத்தியங்கள் முழங்க பிரம்மாண்டமாக அணிவகுத்தனர்.

முப்படைகளின் வெவ்வேறு குழுக்களின் இசை முழக்கத்தை ஆயிரக்கணக்கான மக்கள் உற்சாகமாக கண்டு களித்தனர்.

இறுதியில் குடியரசு தலைவர் மாளிகை, மத்திய அரசு அமைச்சகங்கள் உள்ள கட்டிடங்கள் மின் விளக்குகளில் ஒளிர்ந்த பின் முப்படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நிறைவுற்றது. அதன் பின் குடியரசு தலைவர் புறப்பட்டு சென்றார்.

முப்படைகள் பாசறைகள் திரும்பும் நிகழ்ச்சியை முன்னிட்டு டெல்லியில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!