கீழக்கரையில் நாளை (30/01/2020) மகாத்மா காந்தி நினைவு நாளை முன்னிட்டு மக்கள் விரோத சட்டங்களான குடியுரிமை திருத்த சட்டம் (CAA), தேசிய மக்கள் தொகை பதிவேடு (NPR), தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC) ஆகியவற்றை நீக்க கோரி ஆளும் கட்சியான பாரதிய ஜனதாவை கண்டித்து மனித சங்கிலி போராட்டம் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை, கீழக்கரை தாலுகா ஒருங்கிணைப்பு குழு சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்போராட்டம் மாலை 04.30 மணியளவில் VAO அலுவலகம் முதல் வள்ளல் சீதக்காதி சாலை வரை நடைபெற உள்ளது. இவ்வமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன் இப்போராட்டத்தில் ஜாதி, மத பாகுபாடின்றி வருங்கால தலைமுறையின் நலனை கருதி அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகோள் விடுத்துள்ளார்.





You must be logged in to post a comment.