17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியாளர் தோழர் ராஜசேகரன் விபத்தில் பலி: குடும்பத்தினருக்கு அரசு வேலை, மற்றும் உரிய நிவாரணங்களையும் உடனடியாக வழங்க சத்திய பாதை இதழின் ஆசிரியர் செய்யது ஆப்தீன் கோரிக்கை.!

டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியாளர் தோழர் ராஜசேகரன் விபத்தில் பலி: குடும்பத்தினருக்கு அரசு வேலை, மற்றும் உரிய நிவாரணங்களையும் உடனடியாக வழங்க சத்திய பாதை இதழின் ஆசிரியர் செய்யது ஆப்தீன் கோரிக்கை.!

எழுதியவர்: Askar January 29, 2020, 9:30 pm

“சத்திய பாதை” இதழின் ஆசிரியரும், “கீழை நியூஸ்” குழுமத்தின் நிறுவனருமான, செய்யது ஆப்தீன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது..

திருப்பூர் மாவட்டத்தின் டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் செய்தியாளர் தோழர் ராஜசேகரன் விபத்தில் பலியான சம்பவம் அறிந்து வேதனையும் துக்கமும் அடைந்தேன்.

தோழர் ராஜசேகரனை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தினரோடு துக்கத்தில் நமது செய்தியாளர்கள், மற்றும் நிர்வாகிகள் அனைவரும் பங்கெடுக்கிறோம், மற்றும் ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

அமைதியான சுபாவம் கொண்டவர் ராஜசேகரன். உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜசேகரன் பணியாற்றிய போது இவர் நடந்து கொண்ட விதம், நீதிமன்ற உத்தரவுகளை படித்து டிக்டேட் செய்யும் விதமும், நீதிபதிகளிடம் இவர் நடந்து கொண்ட விதமும், ஆச்சர்யமளிக்கும் செயல் என்றும் ஆகச் சிறந்த பத்திரிகையாளர், அற்புதமான மனிதர்,என உடன் பணியாற்றிய செய்தியாளர்கள் வேதனையுடன் கூறுகின்றனர். இது போன்ற அற்புதமான ஒரு செய்தியாளர் விபத்தில் பலியான சம்பவம் நமக்கும். நாம் சார்ந்துள்ள பத்திரிக்கை மற்றும் குழுமத்தின் நிர்வாகிகள், நிருபர்கள் அனைவருக்கும் பேரதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது. மேலும் விபத்தில் பலியான ராஜசேகரன் குடும்பத்தை கவனத்தில் கொண்டு அவரது மனைவிக்கு அரசு வேலை கிடைக்க அரசு ஆவண செய்ய வேண்டும். மற்றும் உரிய நிவாரணங்களையும் உடனடியாக தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும், கேட்டுக் கொள்கிறேன் எனக் கூறியுள்ளார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!