17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ஜெயமீனாட்சி இன்ஸ்டியூட் மெகந்தியில் உலக சாதனை படைத்தது.!

மதுரை ஜெயமீனாட்சி இன்ஸ்டியூட் மெகந்தியில் உலக சாதனை படைத்தது.!

எழுதியவர்: Askar January 29, 2020, 8:17 pm

மதுரை அழகர்கோயில் மெயின் ரோடு சர்வேயர் காலனி எஸ்.பி ஆபிஸ் எதிரில் உள்ள ஜெய மீனாட்சி டிரைனிங் இன்ஸ்டிட்யூட் பேஷன் டெக்னாலஜி, காஸ்மடாலஜி போன்ற துறையில் டிப்ளமோ பயிற்சிகளை நடத்தக் கூடிய இந்த இன்ஸ்டியூட் சார்பில், மதுரையில் உலக சாதனைக்காக 3000 த்துக்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட மிகப்பெரிய மெஹந்தி விழா சமீபத்தில் காந்தி மியூசியத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அழகு கலை துறையை சேர்ந்த பெண்கள், கல்லூரி மாணவிகள் ஒரே இடத்தில் கூடி மெகந்தி போடும் திருவிழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 1794 பெண்கள் கலந்து கொண்டு 2691 கைகளில் மெகந்தி போட்டுக் கொண்டனர். இதன் மூலம் 2018 ஆம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் 1054 பெண்கள், 1624 கைகளில் மெகந்தி போட்டுக் கொண்ட சாதனை முறியடிக்கப்பட்டது. இதில் குளோபல் அமைப்பின் மேற்பார்வையாளர்களாக மன்மோகன் ராவத் மற்றும் சுபோத் ராவத் ஆகியோர் நேரடியாக பார்வையிட்டு மெஹந்தி உலக சாதனைக்கான சான்றிதழை, மதுரை புதூர் ஜெய மீனாட்சி டிரெய்னிங் இன்ஸ்டியூட் மேனேஜிங் டைரக்டர் திருமதி பாண்டீஸ்வரி முத்துகிருஷ்ணன் அவர்களிடம் வழங்கினார்கள். இந்த உலக சாதனை நிகழ்ச்சியில் மதுரை,திருச்சி, கோவை, ஈரோடு, சென்னை, பெங்களூர் போன்ற பல பகுதிகளில் அழகு நிலையம் நடத்துபவர்களும், பேஷன் டெக்னாலஜி, காஸ்ட்டியூம் டிசைனிங், அழகுக்கலை துறையை சார்ந்தவர்கள் மற்றும் கல்லூரி மாணவிகள் பெருந்திரளாக கலந்து கொண்டனர். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை நடத்திய ஜெய மீனாட்சி டிரெய்னிங் இன்ஸ்டியூட்டின் மிகப்பெரிய முயற்சியாகும். இந்த உலக சாதனை நிகழ்ச்சியை நடத்திய ஜெய மீனாட்சி டிரைய்னிங் இன்ஸ்டிட்யூட் 5 ஆண்டுகளாக காஸ்ட்டியூம் டிசைனிங், அழகுக்கலை பேஷன் காஸ்ட்யூமில் டிப்ளமோ மற்றும் குறுகிய கால பயிற்சிகளையும் நடத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கீழை நியூஸுக்காக, மதுரை கனகராஜ்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!