17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராமநாதபுரத்தில் வாலிபர் 2 பேருக்கு குண்டாஸ்

ராமநாதபுரத்தில் வாலிபர் 2 பேருக்கு குண்டாஸ்

எழுதியவர்: mohan January 29, 2020, 7:47 pm

இராமநாதபுரம் பசும்பொன் நகரைச் சேர்ந்த வழக்கறிஞர் அசோக்குமார், 47.2011 – 16 வரை சக்கரக்கோட்டை ஊராட்சி தலைவராக இருந்தார். ராமநாதபுரம் அதிமுக., ஒன்றிய செயலாளரான இவர், சக்கரக்கோட்டை ரயில்வே கேட் பகுதியில் அதிமுகவினருடன் 2019 டிச.18 ஆம் தேதி மாலை வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, இவரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிட்ட பாலமுரளி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அசோக்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகளை வழிமறித்து தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் அசோக் குமார் புகார் அளித்தார். இதன்படி, 5 பேர் மீது கொலை முயற்சி உள்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து கேணிக்கரை போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ‘ இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய வீரபத்திரசுவாமி கோயில் தெரு பாலசுப்ரமணி மகன் தயாநிதி 21, எம்எஸ்கே நகர் ராமு மகன் அருண்குமார் 24 ஆகியோரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கைது செய்ய கேணிக்கரை போலீசார் பரிந்துரைத்தனர். இதன்படி மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் உத்தரவுப்படி அருண்குமார், தயாநிதி இருவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!