மதுரை மாநகர் நகர் சரக காவல் உதவி ஆணையர் .சூரகுமரன்,விளக்குத்தூண் காவல் ஆய்வாளர் லோகேஸ்வரி மற்றும் விளக்குத்தூண் (குற்றப்பிரிவு) காவல் ஆய்வாளர் .ஜான் கென்னடி மற்றும் மதுரை தூயமரியன்னை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுடன் இணைந்து மதுரை மாநகர் கீழவாசல் சந்திப்பில் தேசிய ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து சாலையில் பயணம் மேற்கொண்டவர்களுக்கு மதுரை தூயமரியன்னை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் மூலம் ரோஜாப்பூ வழங்கி சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்தி சாலை விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.