முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் மதுரை மண்டல அளவிலான.கால்பந்து விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது இப்போட்டியில் 15 அணிகள் பங்குபெற்றன. இப்போட்டியில் முதல் இடத்தை காரைக்குடி அழகப்பா பாலிடெக்னிக் கல்லூரியும் இரண்டாம் இடத்தை திண்டுக்கல் ABC பாலிடெக்னிக் கல்லூரியும்
கீழக்கரை முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரி மூன்றாம் இடத்தையும் பெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் CEO மணிவண்ணன் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். முஹம்மது சதக் பொறியியல் கல்லூரியின் முதல்வர் அப்பாஸ் முகைதீன் வாழ்த்துரை வழங்கினார் .முன்னதாக முஹம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் டாக்டர். அ. அலாவுதீன் அனைவரையும் வரவேற்புரையாற்றினார் .இப்போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களை முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் அல்ஹாஜ் செ.மு.யூசுப் சாஹிப் இயக்குநர் ஜனாப் ஹாமீது இப்ராஹிம் பாராட்டினார்கள். இப்போட்டியினை உடற்கல்வி இயக்குனர் மருதாசலமூர்த்தி மற்றும் சத்தியேந்திரன். செந்தில் முருகன் ஆகியோர்கள் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக. செய்திருந்தனர்
மதுரை மண்டல அளவிலான கால்பந்து விளையாட்டு போட்டிகள்
எழுதியவர்: mohan January 29, 2020, 5:41 pm




You must be logged in to post a comment.