.மதுரை மாநகரில் குற்றங்கள் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் அந்நிய சந்தேக நபர்களை எளிதில் அடையாளம்
காண்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிப்பதற்காகவும் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் சூரியன் நண்பர்கள் குழுவின் தலைவரான . முருகானந்தம் முயற்சியால் 56 CCTV கண்காணிப்பு கேமராக்களை பொருத்தும் நிகழ்ச்சியை மதுரை மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் காவல் துணை ஆணையர் (ச&ஒ) கார்த்திக் மற்றும் காவல் துணை ஆணையர் (குற்றம்) திரு.பழனிகுமார் கலந்துகொண்டனர். காவல் ஆணையர் அவர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த சூரியன் நண்பர்கள் குழுவிற்கு தனது நன்றியை தெரிவித்தார். மேலும் ஜெய்ஹிந்துபுரம் பகுதியில் உள்ள முக்கிய தெருக்கள், வியாபார ஸ்தலங்கள் மற்றும் பள்ளிகள் போன்ற இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டு அதன் பதிவுகளை மூன்று இடங்களில் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.