மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 18வது வார்டு பைபாஸ் சாலை பொன்மேனி பேருந்து நிறுத்தம் வாயிலில் சுமார் 5 அடி ஆழத்திற்கும் சுமார் 10 அடி நீளத்திற்கும் புதர்மண்டி சாலையிலேயே மெகா சைஸ் பள்ளம் உள்ளது .இதனால் அடிக்கடி இந்த பள்ளத்தில் இரு சக்கர வாகனத்தில் வருபவர்கள் கீழே விழுந்து காயம் ஏற்பட்டு செல்கிறார்கள் .மேலும் கார்களில் வருபவா்களின் கார் பள்ளத்தில் சிக்குவதும் வாடிக்கையாகவே உள்ளது .பலமுறை அதிகாரிகளிடம் சொல்லியும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் .உயிர்பலி ஆன பிறகுதான் இந்த பள்ளத்தை மூடுவார்கள் எனவும் கேள்வி எழுப்புகின்றனர். இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்




You must be logged in to post a comment.