18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பள்ளி மாணவ மாணவிகளை பாதங்களை பதம் பார்க்கும் கற்கள். கீழே விழுந்து காயம் ஏற்படும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

பள்ளி மாணவ மாணவிகளை பாதங்களை பதம் பார்க்கும் கற்கள். கீழே விழுந்து காயம் ஏற்படும் அவலம் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

எழுதியவர்: mohan January 29, 2020, 4:36 pm

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 19வது வார்டு எல்லிஸ் நகர் சர்வோதயா நகர் சிவகாசி நாடார் மேல்நிலைப்பள்ளி பள்ளியிலிருந்து சுமார் 300 அடி நீளத்திற்கு குழிகள் தோண்டப்பட்டு பெரிய பெரிய பாறாங்கற்கள் ஆக வெளியே தெரிகிறது. மேலும் பள்ளி நுழைவாயிலில் இந்த பாறைகள் வெளியே இருப்பதால் குழந்தைகளை கொண்டு வரும் பெற்றோர்கள் இருசக்கர வாகனம் மீது கற்கள் ஏறி கீழே விழும் அவலமும் ஏற்படுகிறது. பள்ளி குழந்தைகள் இந்தக் கற்கள் மீது மோதி கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது என பெற்றோர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் இதுபோன்ற குழி ஒன்று தோண்டிணாா்கள். மீண்டும்மீண்டும் குழிகளை தோண்டி சாலையை சேதப்படுத்தும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும்  என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக வைத்துள்ளார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!