17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

எழுதியவர்: Askar January 28, 2020, 11:05 pm

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 71-வது குடியரசு தின விழா கொண்டாட்டம்.!

நிலக்கோட்டை சௌராஷ்டிரா நடுநிலைப்பள்ளியில் 71 ஆவது குடியரசு தின விழா கோலாகலமாக பள்ளியின் நிர்வாகி திரு ஜா. சுதாகரன் தலைமையில் நடந்தது. பட்டதாரி ஆசிரியர் திரு. இரா .சுந்தரபாண்டியன் வரவேற்புரை வழங்கினார். 9:00 மணியளவில் பள்ளியின் நிர்வாகி அவர்கள் கொடியேற்றி சிறப்பித்தார். தலைமையாசிரியர் திரு இரா . விஜயகுமார் குடியரசு தினவிழாவைப் பற்றி சிறப்புரையாற்றினார். பின்பு மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. திறன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாகி திரு . ஜா சுதாகரன் அவர்கள் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கினார்.திறன் போட்டிகளின் பயிற்சிகளை ஆசிரியை திருமதி அ. ராணி அளித்தார். விழா நிகழ்ச்சிகளை பட்டதாரி ஆசிரியர் திரு ம. ஜான் சாம்சன் தொகுத்து வழங்கினார். திருமதி இரா.ராஜி ஆசிரியை நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்தார். திருமதி இரா. பத்மினி ஆசிரியை நன்றியுரை வழங்கினார். நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவு பெற்றது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!