தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாய நிலங்களில் மின் கம்பங்கள் அகற்ற வலியுறுத்தி “தமிழ் விவசாயிகள் சங்கத்தின்” மாநிலத் தலைவர் ஓ.ஏ.நாராயனசாமி அறிக்கை.! தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் தாலுகா தென்னம்பட்டி கிராமம் புல்வாய் குளம் கன்னடியன் குளம் இந்த குளங்களில் காற்றாலை மின் கம்பங்களும் சோலார் நிறுவனத்தின் மின் கம்பங்களும் அதிகமான அளவில் நடப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் டிசம்பர் ஒன்பதாம் தேதி மனு கொடுக்கப்பட்டது நடவடிக்கை இல்லை, அதைத் தொடர்ந்து, 2020 ஜனவரி 9ஆம் தேதி மீண்டும் மனு கொடுக்கப்பட்டது. இதற்கும் தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் இல்லை.

அப்படி என்றால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு துணை போகிறதா தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம்.? தூத்துக்குடி மாவட்ட நிர்வாகமே இந்த மின் கம்பங்களை உடனடியாக அகற்றப்படவில்லை என்றால் விவசாயிகளின் மாபெரும் போராட்டத்தை சந்திக்க நேரிடும், எனக் கூறியுள்ளார்.
உண்மை செய்தியை உலகுக்கு பரப்ப..
Like this:
Like Loading...
Related
You must be logged in to post a comment.