18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » “கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலியாக அபாயகரமாக இருந்த காய்ந்த மரங்கள் அகற்றம்: கீழை நியூஸுக்கு பொதுமக்கள் பாராட்டு.!

“கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலியாக அபாயகரமாக இருந்த காய்ந்த மரங்கள் அகற்றம்: கீழை நியூஸுக்கு பொதுமக்கள் பாராட்டு.!

எழுதியவர்: Askar January 28, 2020, 3:24 pm

“கீழை நியூஸ்” செய்தியின் எதிரொலியாக அபாயகரமாக இருந்த காய்ந்த மரங்கள் அகற்றம்: கீழை நியூஸுக்கு பொதுமக்கள் பாராட்டு.!

இந்த மரம் அகற்ற நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி, மற்றும் மாவட்ட நிர்வாகம், மின்சார வாரியம், உயிர் பலி ஏற்படும் முன் அகற்ற பொதுமக்கள் கோரிக்கை.எனும் தலைப்பில் நேற்று ஒரு செய்தியை வெளியிட்டோம்.

மேற்கண்ட புகைபடங்கள் அழகர் கோயில் ரோடு, தல்லாகுளம் பெருமாள் கோயில் பொட்டலில் உள்ள மரம். காய்ந்து தளிர்த்து துளிர்விட வாய்ப்பில்லை. பொதுமக்களின் உயிர், உடமையின் பாதுகாப்பு கருதி, மரத்தினை அகற்றிட மதுரை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, போக்குவரத்துத் காவல் துறை, மின்சார வாரியத் துறை ஆகிய துறைகள் விரைந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் உயிர் காத்திட வேண்டும் என மேற்கொள்ள வேண்டுமாய் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்டுக் கேட்டுக்கொண்டனர். இது நமது கீழை நியூஸ்( சத்திய பாதை மாத இதழ்) திங்கள் நேற்று இந்த செய்தியை பதிவு செய்திருந்தோம் இதன் செய்தி எதிரொலியாக மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக மரக் கிளைகளை அகற்றினார்கள் விரைவாக செயல்பட்ட மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கும் மற்றும் கீழை நியூஸ் (சத்திய பாதை மாத இதழுக்கும் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளும் நன்றியை தெரிவித்தனர்.

செய்தியாளர், வி. காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!