17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமூக வலைத்தளங்களில் வைரலான பட்டாகத்தி திருமண நிகழ்வு- ரூட் தலைகளை கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.!

சமூக வலைத்தளங்களில் வைரலான பட்டாகத்தி திருமண நிகழ்வு- ரூட் தலைகளை கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.!

எழுதியவர்: Askar January 28, 2020, 1:13 pm

சமூக வலைத்தளங்களில் வைரலான பட்டாகத்தி திருமண நிகழ்வு- ரூட் தலைகளை கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் பாராட்டு.!

சென்னை திருவேற்காட்டில் முன்னாள் ரூட்டு தல திருமணத்தில், பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.

பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த முன்னாள் ரூட் தல ஒருவரின் திருமண விழாவில், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.  அப்போது மணமக்கள் மேடையில் ஏறிய  கும்பல், நான்கு அடி நீள பட்டாகத்தியால் கேக் வெட்டி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் பட்டாகத்தியுடன் மாணவர் ஒருவர் நடனமாடினார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது.  இந்த நிலையில் பட்டாகத்தியுடன் ஆட்டம் காட்டிய இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கைது செய்த காவல்துறைக்கு பொதுமக்கள் நன்றி மற்றும் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!