17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக அரசு வழங்கிய காப்பீட்டுத் தொகையை வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

தமிழக அரசு வழங்கிய காப்பீட்டுத் தொகையை வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

எழுதியவர்: Askar January 28, 2020, 9:23 am

தமிழக அரசு வழங்கிய காப்பீட்டுத் தொகையை வழங்காத அரசு அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே வெம்பக்கோட்டை யில் தமிழக அரசு வழங்கிய காப்பீட்டுத்தொகையை சரிவர முறையாக வழங்காத வெம்பக்கோட்டை ஒன்றிய விவசாயத்துறை மற்றும் புள்ளியல் துறையை கண்டித்து வெம்பக்கோட்டை ஒன்றியத்தைச் சேர்ந்த விவசாயிகள் 200க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தை தமிழ் விவசாயிகள் சங்கம் மற்றும் ஐந்து மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு ஆகியன இனைந்து நடத்தியது.

தமிழக அரசு கடந்த ஆண்டு விருதுநகர் மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து விவசாயிகளுக்கு முறையான பயிர் காப்பீடு வழங்க ஒப்புதல் அளித்து ஆணையிட்டது.

அந்த நம்பிக்கையில் விவசாயிகள் கடந்த ஆண்டு ஏற்பட்ட நஷ்டத்தில் இருந்து தங்களுக்கு இழப்பீடு தொகை வரும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த விவசாயிகளுக்கு பேரிடியாக பயிர் காப்பீட்டு அளவீட்டை வெம்பக்கோட்டை ஒன்றியத்தை உள்ள விவசாயத் துறை மற்றும் புள்ளியியல் துறை அறிவித்தது.

பயிர் காப்பீட்டு முறையை கணக்கீடு செய்ததில் வெம்பக்கோட்டை ஒன்றிய விவசாய துறை அதிகாரிகள் பெரும் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும் விருதுநகர் மாவட்டம் முழுவதும் வறட்சி மாவட்டமாக அறிவித்திருந்தும் பயிர் காப்பீடு களை முழுவதுமாக வழங்காமல் லட்சுமிபுரம் விஜய ரங்கபுரம் போன்ற வருவாய் கிராமங்களில் காப்பீடு 0 என குறிப்பிட்டுள்ளனர் பூஜ்ஜியம் என்றால் எந்த ஒரு இழப்பீடும் கிடையாது மேலும் கங்கர் செவல்பட்டி ஜெகவீர பட்டி புள்ளக்கவுண்டன்பட்டி போன்ற வருவாய் கிராமங்களில் மிகக்குறைவான மதிப்பீட்டு முறையில் காப்பீடு குறிக்கப்பட்டுள்ளது

இது இந்த முறையிலான காப்பீட்டுத் தொகை விவசாயிகளை அவமானப்படுத்தும் செயல் என்று விவசாயிகள் கருதுகின்றனர்

கடந்த ஆண்டு (2019) ஏற்பட்ட வறட்சியாலும் படைப்புழு தாக்குதலால் மக்காச்சோளப்பயிர்கள் அனைத்தும் சேதமடைந்து நஷ்டமானது அப்படி இருந்தும் இவ்வாறு இழப்பீடு முறையை அறிவித்தது விவசாயிகளை பெரிதும் பாதிப்படைய செய்கிறது இதனால் விவசாயிகளின் வாழ்வே கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் உள்ளனர்.

இந்த புள்ளியல் துறை குறிப்பிட்டுள்ள காப்பீட்டு முறையினை மறுபரிசீலனை செய்து முறையான காப்பீடு வழங்க தமிழக அரசு முறையான காப்பீடு விவசாயிகளுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர் என்றும் அவ்வாறு வழங்க முன்வரவில்லை என்றால் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட அதுவே காரணமாக அமையும் என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!