18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி அருகே திருமணம் முடிந்த கையோடு பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய புதுமண தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

உசிலம்பட்டி அருகே திருமணம் முடிந்த கையோடு பள்ளிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கிய புதுமண தம்பதிகளுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

எழுதியவர்: mohan January 27, 2020, 7:05 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள சின்னபாலார்பட்டியைச் சேர்ந்த மாயபாண்டிக்கும், பிருந்தாவுக்கும் உசிலம்பட்டி வத்தலக்குண்டு ரோட்டில் உள்ள எஸ்கேபி திருமண மண்டபத்தில் இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றது.அதனைதொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்டவர்கள் புதுமண தம்பதிகளுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்தனர். அதனைதொடர்ந்து திருமண விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் புதுமணத் தம்பதிகள் திருமண முடிந்த கையுடன் இலவசமாக மரக்கன்றுகளை வழங்கினர். பின்பு அருகே உள்ள கீரிபட்டி, மேக்கிழார்பட்டி அரசு பள்ளிகளில் சுமார் 300க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை புதுமண தம்பதிகள் வழங்கினர்.

திருமண விழாவில் மரம் வளர்ப்போம், மழை பெறுவோம் என வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி மரக்கன்றுகள் வழங்கிய இந்த நெகிழ்ச்சி சம்பவம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.மேலும் திருமண விழாவில் கலந்துகொண்டவர்கள் மட்டுமல்லாமல் அங்குள்ள இரண்டு அரசு பள்ளிகளுக்கு மரக்கன்றுகளை வழங்கிய புதுமண தம்பதிகளை பொதுமக்களும்,சமூக ஆர்வலர்களும் பெரிதும் பாராட்டி வருகின்றனர்.

உசிலை சிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!