17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

எழுதியவர்: mohan January 27, 2020, 5:42 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் தேசிய ஒருங்கிணைப்புக்கான எதிர்கால முன்னோக்கு தேசிய கருத்தரங்கு நடைபெற்றது. எஸ். விஜய கனக துர்கா , மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் மாணவி வரவேற்றார். கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா தலைமையுரையாற்றினார். நஸ்ரின் பிந்த் அஹமது பாவா,முதல்வர்,ஹிதாயத் மெஸ்கோ அரபிக் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தலைவர் ஹிதாயத் பெண்கள் கிளை,இயக்குநர் ஹிதாயத் பவுண்டேசன்,ஊக்கமூட்டும் பயிற்சி மையம்,கங்கனடி தேசிய ஒருமைப்பாடு, எதிர்காலச் சிந்தனைகள் குறித்து பேசினார். எஸ்.அப்ரின், மூன்றாமாண்டு ஆங்கில இலக்கியம் மாணவி நன்றி கூறினார். கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள்,தேர்வாணையர், பல்துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் 2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். கருத்தரங்கு ஏற்பாடுகளை உள்தர உத்தரவாதக் குழு மற்றும் மாணவர்கள் நலக்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!