17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குப்பைகளை முறைப்படி மூடி எடுத்துச் செல்லாமல் சாலை முழுவதும் கொட்டி செல்லும் மதுரை மாநகராட்சி வாகனம். துர்நாற்றம் வீசும் பகுதிகள்

குப்பைகளை முறைப்படி மூடி எடுத்துச் செல்லாமல் சாலை முழுவதும் கொட்டி செல்லும் மதுரை மாநகராட்சி வாகனம். துர்நாற்றம் வீசும் பகுதிகள்

எழுதியவர்: mohan January 27, 2020, 1:03 pm

மதுரை மாநகராட்சிக்கு சேகரிக்கப்படும் குப்பைகள் வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவனியாபுரம் அருகே உள்ள வெள்ளைக் கல்லில் தரம் பிரிக்கப்படுகிறது, ஆனால் இவர்கள் முறைப்படி மூடாமல் திறந்த வேற குப்பைகளை வேனில் எடுத்து செல்வதால் சாலை முழுவதும் அது  கொட்டிக்கொண்டே செல்கிறது. இதனால் பின்னால் வரும் வாகனங்கள் மீதும் சிதறி இருசக்கர வாகனங்கள் மீது விழுகிறது.  மதுரை பைபாஸ் சாலை போடி லயன் மேம்பாலத்தில் சாலை முழுவதும் கழிவுகளை கொட்டிய சென்றுள்ளது. இதை பார்த்த பொதுமக்கள் இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்கள். பலமுறை சொல்லியும் இவர்கள் அலட்சியப் போக்குடன் செயல்படுவதாக வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் குற்றம் சாட்டுகின்றனர். மாநகராட்சி இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!