18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.!

தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.!

எழுதியவர்: Askar January 27, 2020, 12:01 am

தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியில் நடைபெற்றது.!

தமிழ்நாடு தேசிய தொழிலாளர் அமைப்பு பொதுக்குழுக் கூட்டம் கன்னியாகுமரியிலுள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் எம்.ஜெயப்பிரகாஷ் தலைமை வகித்தார்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி ஓய்வூதியம் குறைந்த பட்சம் ரூ. 3,000 வழங்கப்பட வேண்டும். தொழிலாளர் வருங்கால வைப்புநிதி திட்டத்தின் கீழ் தற்போது ரூ. 15,000- மட்டுமே சந்தா பிடித்தம் செய்யப்படுகிறது.

இந்த நிலையை மாற்றி தொழிலாளர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மொத்த ஊதியத்துக்கும் வைப்புநிதி சந்தா பிடித்தம் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கூட்டத்தில் தமிழகம் முழுவதும் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!