17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாம்பன் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு..

பாம்பன் அரசு பள்ளியில் முன்னாள் மாணவர் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2020, 10:23 pm

இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் அரசு மேல்நிலை பள்ளியில் 2009-2010 ஆம் கல்வி ஆண்டு பத்தாம் வகுப்பு பயின்ற மாணவர் சந்திப்பு நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாணவர் 45 பேர் இணைந்து பள்ளிக்கு ரூ.45 ஆயிரம் மதிப்பில் இன்வெர்ட்டர் சாதனம் நினைவு பரிசு வழங்கினர். முன்னாள் மாணவர் கால்வின் மில்லர் நினைவாக ஆசிரியர்கள் கே.வேலு, ஏ.ஜஸ்டின், எம்.வீரபாண்டி, எஸ்.அஜிதாகுமாரி, பி.கல்யாண மீனா, எஸ்.முத்துராமலிங்கம் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆர்.நம்பு வினிதன் நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!