18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டம் சேக்கிப்பட்டியில், கூச்சலும் குழப்பமுமாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.!

மதுரை மாவட்டம் சேக்கிப்பட்டியில், கூச்சலும் குழப்பமுமாக நடைபெற்ற கிராம சபைக் கூட்டம்.!

எழுதியவர்: Askar January 26, 2020, 9:13 pm

மேலூர் அருகே உள்ள சேக்கிபட்டி ஊராட்சியில் குடியரசு தினத்தை முன்னிட்டு இன்று கிராமசபை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்க்கு பார்வையாளராக கொட்டாம்பட்டி யூனியனில் இருந்து திரு. K.மதன்பாபு Deputy zonal BDO வருகை தந்திருந்தார்கள். கூட்டத்தில் கொட்டாம்பட்டி 9வது வார்டு கவுன்சிலர் சே.மழுவேந்தி ஊராட்சி மன்ற தலைவர், பி.பிரயா கிராம நிர்வாக அலுவலர் திரு.சி.அழகுராஜன், சுகாதார செவிலியர் சி.வாணி, சமூக ஆர்வலர் சி.அசாருதீன் ஸ்ரீமுத்தாலம்மன் நண்பர்கள் குழு பொருப்பாளர் திரு.ர.பிரபு திரு.மூ.கார்த்தீக், திரு.சோ.யோகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் ஆகஸ்டு, முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள வரவு செலவு கணக்குகளின் ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது உடனே அங்குள்ளவர்களிடம் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டதால் முப்பது நிமிடம் கூட்டம் தடைபட்டது. பின்னர் நடைபெற்ற கூட்டத்தில் பொதுமக்களின் தீர்மானங்களை பொதுமக்கள் முன்னிலையில் தீர்மான புத்தகத்தில் எழுதி பின்னர் மக்களிடம் கையெழுத்து வாங்க வேண்டும் என கூறப்பட்ட நிலையில் பொதுமக்களின் கோரிக்கைகளை மனுவாக கொடுத்தால் மட்டுமே கூட்டம் முடிந்த பின்னர் கூட்டத்தில் ஆகஸ்டு, முதல் டிசம்பர் மாதம் முடிய உள்ள வரவு செலவு கணக்குகளின் ஆவணங்கள் மற்றும் ரசீதுகள் பொதுமக்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது உடனே அங்குள்ளவர்களிடம் கூச்சல் குழப்பம் ஏற்ப்பட்டதால் முப்பது நிமிடம் கூட்டம் தடைபட்டது. முடிந்த பின்னர் நாளை அல்லது அதன் பிறகு தீர்மான நோட்டில் ஏற்றி அதன் பிறகு பிடிஓ அலுவலகத்திற்க்கு அனுப்புவோம் என ஊராட்சிமன்ற தலைவரின் கனவர் பிரபு தலைமையிலான சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட இந்த ஊராட்சியில் தலைவரின் கணவரே தலைவர் என்கிற நினைப்பில் பொதுமக்களிடையே வாக்குவாதத்தில் ஏற்ப்பட்டதால் மீண்டும் கூட்டத்தில் சலசலப்பு ஏற்ப்பட்டு கூட்டம் மீண்டும் தடைபட்டது. ஊராட்சி செயலாளர் இருக்கும் போதுதான் இந்த நிலை என்றால் தேர்தல் வாக்குருதியில் வெளிப்படையான நிர்வாகத்தை தருவேன் என கூறிவிட்டு இப்போது தீர்மானத்தைகூட ஏற்ற மறுக்கும் தலைவரின் பெயரை சொல்லி அதிகாரம் பன்னுகிறவர்களை நினைத்து இனி வரும் ஐந்து ஆண்டுகளும் மக்கள் வருத்தப்பட வேண்டும் என மக்கள் வெளிப்படையாக பேசி சென்றது பரவலாக கேட்க முடிந்தது. ஊராட்சிக்கு பெண்தான் தலைவர் என தேர்வுசெய்யப்பட்ட பிறகு தேர்வு செய்யப்பட்ட தலைவரே சுதந்திரமாக செயல்படுவாரா?

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!