17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந்தியாவின் 71-வது குடியரசு தினவிழா.!

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந்தியாவின் 71-வது குடியரசு தினவிழா.!

எழுதியவர்: Askar January 26, 2020, 8:54 pm

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பாக நடைபெற்ற இந்தியாவின் 71-வது குடியரசு தினவிழா.!

இந்தியாவின் 71-வது குடியரசு தினம் நாடு முழுவதும் 26.01.2020 ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் குடியரசு தின விழா சிறப்பாக நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ் I.A.S, நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் I.P.S, திருநெல்வேலி சரக காவல் துணை தலைவர் திரு.பிரவீன்குமார் அபிநபு I.P.S , திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், திரு.ஓம் பிரகாஷ் மீனா I.P.S , நெல்லை மாநகர காவல் துணை ஆணையாளர்கள் திரு மகேஷ்குமார் I.A.S (குற்றம் மற்றும் போக்குவரத்து ), திரு. சரவணன் (சட்டம் மற்றும் ஒழுங்கு), மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பாபிரபாகர் சதீஷ் I.A.S மூவர்ண தேசிய கொடியை ஏற்றி, காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நெல்லை மாநகரத்தில் பணிபுரிந்துவரும் 45 காவல் ஆளுநர்களுக்கு, தமிழக முதல்வரின் அண்ணா விருதுகளையும், நற்சான்றிதழ்களையும், மாவட்ட ஆட்சியர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் வழங்கி கெளரவித்தார்.

மேலும் குடியரசு தின விழாவிற்கு திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் திரு.தீபக் மோ.டாமோர் I.P.S தலைமையில் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்கள் விழாவிற்கு, பாதுகாப்பு வழங்கி எவ்வித அசம்பாவிதமுமின்றி குடியரசு தின விழா சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!