இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய வளர்ச்சி பணிகளை விரைந்து நிறைவேற்றுவதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.விஜயகுமார் துரிதமாக செயல்பட்டார். இவரது பணியை பாராட்டி, இராமநாதபுரத்தில் இன்று நடந்த குடியரசு தின விழாவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்.விஜயகுமாருக்கு, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பணி பாராட்டு நற்சான்றிதழ் வழங்கினார்.
அதே போல் தேர்தல் பணியில் சிறந்து பணியாற்றிய வட்டார ஊராட்சி அலுவலர் உம்முல் ஜாமியாவுக்கு மாவட்ட ஆட்சியர் நற்சான்றிதழ் வழங்கினார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வீ.வருண்குமார், கூடுதல் ஆட்சியர் மா.பிரதீப்குமார், சார் ஆட்சியர் என்.ஓ.சுகபுத்ரா ஆகியோர் உடனிருந்தனர்.







You must be logged in to post a comment.