கீழக்கரை இஸ்லாமியா கல்வி நிறுவனங்கள் சார்பாக 71ஆவது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இவ்விழாவை டாக்டர் APJ அப்துல் கலாம் அறக்கட்டளையின் அறங்காவலர் சேக் சலீம் தேசிய கொடி ஏற்றி துவங்கி வைத்தார். அதை தொடர்ந்து தாளாளர் எம்எம்கே. முஹைதீன் இப்ராஹிம் தலைமை தாங்கினார். இந்நிகழ்வின் முக்கிய பகுதியாக மாணவர்களின் வண்ணமிகு நாட்டுப்பற்று கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பின்னர் அதனை தொடர்நது மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளுக்கான பரிசுகள் வழங்கப்பட்டன. ஜமாத்தினர் மற்றும் பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
















You must be logged in to post a comment.