மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டி கிராமத்தில் உள்ள அரசு கள்ளர் தொடக்கப்பள்ளியில் குடியரசுதின விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அமமுகவைச் சேர்ந்த அந்த பகுதி ஒன்றிய கவுன்சிலர் அலெக்ஸ் பாண்டியன் மற்றும் ராஜாக்காப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சித்ரா பால்ராஜ் ஆகியோர்கள் கலந்துகொண்டு தேசியகொடி ஏறறுவதாக இருந்தது.இருவரும் தமது ஆதரவாளர்களுடன் பள்ளியில் கொடியேற்ற முயலும் போது அதே ஊரைச்சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளரான சின்னச்சாமியின் தம்பி முத்தையா மற்றும் சின்னச்சாமியின் மகன் ஈஸ்வரன் தனது ஆதரவாளர்களுடன் இக்கிராமத்தில் தன்னைக் கேட்காமல் தேசியக்கொடி ஏற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இரு தரப்பினருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் முத்தையா தரப்பினர் தேசியகொடியை ஏற்றவிடாமல் தேசியகொடியை கொடிக்கம்பத்திலிருந்து இறக்கி பறித்துச் சென்றனர்.மேலும் இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டதில் பெரியகருப்பன்
பேச்சியம்மாள் ஆகிய இருவரும் லேசான காயமடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.நடைபெற்ற உள்ளாட்சி மன்றத் தேர்தலில் சின்னச்சாமி அப்பகுதி ஊராட்சி மன்றத்தலைவருக்கு போட்டியிட்டு தோல்வியுற்றதாகவும் அதனால்தேர்தல் முன்விரோதத்தால் இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக தெரிகிறது. இது தொடர்பாக சித்ரா மற்றும் அலெக்ஸ் பாண்டியன் எழுமலை காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவரையே தேசிய கொடியேற்றவிடாமல் அதிமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்ட இந்த சம்பவம் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உசிலம்பட்டி அருகே எம்.பாறைப்பட்டியில் தேசியக்கொடி ஏற்றுவதில் இரு கட்சியினருக்கிடையே ஏற்பட்ட மோதலில் 2 பேர்; காயமடைந்தனர்.
எழுதியவர்: mohan January 26, 2020, 5:38 pm




You must be logged in to post a comment.