17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கிராம சபை கூட்டத்தில் 5வது மற்றும் 8வது வகுப்பினருக்கான அரசு பொதுத்தேர்வை கைவிடக் கோரி மக்கள் பாதை சார்பாக கோரிக்கை.

கிராம சபை கூட்டத்தில் 5வது மற்றும் 8வது வகுப்பினருக்கான அரசு பொதுத்தேர்வை கைவிடக் கோரி மக்கள் பாதை சார்பாக கோரிக்கை.

எழுதியவர்: mohan January 26, 2020, 5:29 pm

இராஜசிங்கமங்கலம் ஒன்றியம்:

இராஜசிங்கமங்கலம் அருகே உள்ள தும்படைக்கா கோட்டை ஊராட்சியில் கிராம சபை கூட்டம் தும்படைக்கா கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மோகன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.தும்படைக்கா கோட்டை ஒன்றிய குழு உறுப்பினர் புவனேஸ்வரி ராஜா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக இராஜசிங்கமங்கலம் ஒன்றிய குழு தலைவர் ராதிகா பிரபு கலந்து கொண்டார். துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலசுப்பிரமணியன், சிவசாமி,தும்படைக்கா கோட்டை ஊராட்சி செயலர் அந்தோணி சாமி , தும்படைக்கா கோட்டை ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் தீபம் இந்தியா அறக்கட்டளை பொருளாளர் ஆல்பர்ட், மக்கள் பாதை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கிராம ஊராட்சியின் முக்கிய தீர்மானங்களாக வீடுதோறும் கழிப்பறை அமைத்தல், ஊரணி பராமரிப்பு , ஆழ்துளை கிணறு அமைத்தல், சாலை அமைத்து தருதல், குடிதண்ணீர் தொட்டி அமைத்தல் , மழைநீர் சேகரிப்பு சம்பந்தமான விழிப்புணர்வு பரப்புரையை அரசே மேற்கொள்ளுதல் ,பேருந்து வசதி , மின் கம்பங்களை சரி செய்யவும் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. மேலும் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து விவாதிக்கப்பட்டு தீர்மானமாக பதிவு செய்யப்பட்டுள்ளது.இந்நிகழ்வில் பொதுமக்கள், இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம் ஒன்றியம்:

இராமநாதபுரம் மாவட்டம் கழுகூரணி ஊராட்சியில் குடியரசு தினத்தன்று நடந்த கிராமசபை கூட்டத்தில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் பிரதீப்குமார் அவர்கள் கலந்து கொண்டார். தமிழ்நாட்டிலேயே மிகப்பெரிய பூங்கா கழுகூரணி ஊராட்சியில் 1900 ஏக்கரில் அமைப்பதற்கு பொதுமக்களிடமும் மக்கள்பாதையிடமும் ஆதரவு கேட்டார்கள்.மேலும் பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை சார்பாக வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர் கலா கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற துணை தலைவர் கனகவள்ளி கதிரேசன் , ஊராட்சி செயலர் ரமாபிரியா துரை, முன்னாள் கவுன்சிலர் முனீஸ்வரன் , மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் மற்றும்   அரசு அலுவலர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர்.சித்தார்கோட்டை ஊராட்சியில் இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் தினேஷ் கலந்து கொண்டார்.தேவிபட்டினம் ஊராட்சியில் தேவிபட்டினம் ஊராட்சி பொறுப்பாளர் உலகுராஜ் கலந்து கொண்டார்.மாதவனூர் ஊராட்சியில் இராமநாதபுரம் ஒன்றிய பொறுப்பாளர் ராமு கலந்து கொண்டார்.

மண்டபம் ஒன்றியம்:

பாம்பன் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் அகிலா அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கிராம சபைக் கூட்டத்தில் மக்கள் பாதையின் மண்டபம் ஒன்றியம் சார்பாக கலந்துகொண்டு 5 மற்றும் 8ம் வகுப்பினருக்காக தமிழக அரசு கொண்டு வருகின்ற பொதுத் தேர்வு முறையை கைவிட வலியுறுத்தி ஒன்றிய பொறுப்பாளர் இராமு அவர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளி குழந்தைகளும் கலந்து கொண்டு இக்கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர். இக்கூட்டத்தில் மன்ற துணைத்தலைவர், வார்டு உறுப்பினர்கள், மின்துறை, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் ஊராட்சி பொறுப்பாளர், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிளாரட் மற்றும் செவிலியர்கள், ஊராட்சி செயலர் விஸ்வநாதன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இதே கோரிக்கையை வலியுறுத்தி தங்கச்சிமடம் ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் குயின்மேரி அவர்கள் தலைமையில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்திலும் மக்கள் பாதையின் சார்பாக தங்கச்சிமடம் பொறுப்பாளர் அந்தோணி தினா அவர்களாலும் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மண்டபம் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் , கிராம நிர்வாக அலுவலர் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.மண்டபம் ஒன்றியம் பட்டிணம்காத்தான் ஊராட்சியில் ஊராட்சிமன்ற தலைவர் சித்ராமருது, மண்டபம் வார்டு கவுன்சிலர் மருது பாண்டியன், செயலாளர் நாகேந்திரன்,வார்டு ஊராட்சி உறுப்பினர்கள் , அரசு துறை அதிகாரிகள், மண்டபம் ஒன்றிய பொறுப்பாளர்கள் வீரக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.கற்பூரவலசை கிராம பொதுமக்கள் மற்றும் மக்கள் பாதை சார்பாக கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது.அம்பேத்கார் நகர் முதல் கற்பூரவலசை வரை மின்சார விளக்கு அமைத்து தர வேண்டியும், சேதடைந்துள்ள சாலையினை சீரமைத்து தருதல்,பொது கட்டிடத்தை கட்டித்தருதல், 5வது மற்றும் 8ம் வகுப்பினருக்கான பொதுத்தேர்வை அரசு கைவிட வேண்டியும் அனைத்து கிராமங்கள் சார்பாகவும் மற்றும் மக்கள் பாதையின் சார்பாகவும் வலியுறுத்தப்பட்டது.

போகலூர் ஒன்றியம்:செய்யாலூர் ஊராட்சியில் போகலூர் ஒன்றிய பொறுப்பாளர் நாகராஜ் கலந்து கொண்டார்.

நயினார்கோவில் ஒன்றியம்: தியாகவன்சேரி ஊராட்சியில் மக்கள் பாதை தன்னார்வலர் குழந்தைவேலு கலந்து கொண்டார்.

கமுதி ஒன்றியம் பேரையூர் ஊராட்சியில் பேரையூர் ஊராட்சி பொறுப்பாளர்கள் ராகுல்,பாபு ஆகியோர் கலந்து கொண்டனர்.

கிராம சபையே கிராம ஊராட்சியின் பேராயுதம் என்பதை நிரூபிக்கும் வகையில் இளைஞர்கள் தங்களது கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றக்கோரி கிராம சபை கூட்டங்களில் கலந்து கொள்வது மகிழ்ச்சியளிக்கிறது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!