மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் சீமானுத்து ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸ்பாண்டியன் மற்றும் ஊராட்சி ஒன்றிய அதிகாரி தாமோதரன் கலந்துகொண்டு கிராமத்தில் உள்ள பிரச்சனைகளை பொதுமக்களிடம் கேட்டறிந்தனர்.
அதனைத் தொடர்ந்து கிராமத்தில் கிடப்பில் கிடக்கும் வளர்ச்சி திட்ட பணிகளை விரைந்து முடிப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டனர். அதனை தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவர் அலெக்ஸ் பாண்டியனிடம் கிராம மக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். கோரிக்கை மனுக்களை பெற்ற ஊராட்சி மன்ற தலைவர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.இதில் 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
உசிலை சிந்தனியா






You must be logged in to post a comment.