17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். 

திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். 

எழுதியவர்: Askar January 26, 2020, 4:04 pm

திமுக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு மு.க.ஸ்டாலினிடம் நேரில் வாழ்த்து பெற்றார். திமுக முதன்மை செயலாளராக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டார். டி.ஆர்.பாலு நாடாளுமன்றக் குழுத்தலைவராக பொறுப்பு வகிப்பதால், அவருக்கு பதிலாக கே.என்.நேரு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் தி.மு.க. தலைமைக் கழக முதன்மைச் செயலாளராக நியமிக்கப்பட்ட கே.என்.நேரு இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் மற்றும் கழகப் பொருளாளர் துரைமுருகன் ஆகியோரை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.அப்போது, கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., செய்தி தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!