17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தியதால் பழனியில் பரபரப்பு.!

மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தியதால் பழனியில் பரபரப்பு.!

எழுதியவர்: Askar January 26, 2020, 2:47 pm

மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடத்தியதால் பழனியில் பரபரப்பு.!

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் (TARATDAC) சார்பில் 25.01.2020 அன்று நள்ளிரவு (26.01.2020) 12.00 மணியளவில் கடுமையான குளிருக்கு மத்தியில், குடியுரிமை சட்டத்திற்கு எதிராகவும், இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தியும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள காந்திசிலை முன்பாக சங்கத்தின் பழனி நகர தலைவர் காளீஸ்வரி தலைமையில், பழனி நகர செயலாளர் தங்கவேல் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் அரசியல் சாசன உறுதிமொழியை மாவட்ட செயலாளர் பகத்சிங் வாசிக்க, கூடியிருந்த மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

இறுதியாக சங்கத்தின் உயரம் தடைபட்டோர் மாநில செயலாளர் வெங்கடேஷ் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை முடித்து வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் நள்ளிரவில் அரசியல் சாசன உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!