இராமநாதபுரம் கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் இன்று காலை 9 மணியளவில் 71 வது குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது. மாணவிகளின் அணிவகுப்பு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் எஸ். சுமையா வரவேற்றார்.கல்லூரி தாளாளர் மருத்துவர் ரஹ்மத்துன் நிஷா தலைமையுரையாற்றினார். நஸ்ரின் பிந்த் அஹமது பாவா, முதல்வர், ஹிதாயத் மெஸ்கோ அரபிக் ஆசிரியர் பயிற்சி கல்லூரி, தலைவர் ஹிதாயத் பெண்கள் கிளை, இயக்குநர் ஹிதாயத் பவுண்டேஷன், ‘ஊக்கமூட்டும் பயிற்சி மையம், கங்கனடி, கே எஸ் ஏ,ஆலோசகர்,மென்திறன் பயிற்சியாளர் தேசியக் கொடி ஏற்றினார். ‘ ஆங்கில இலக்கிய மூன்றாமாண்டுமாணவிவிஜய கனக துர்காபேசினார். மாணவப்பேரவை உறுப்பினர் ஜனனி நன்றி கூறினார். கிரசன்ட் பள்ளி சென்னை , தாளாளர் மரியம் ஹபிபு, கல்லூரி துணை முதல்வர்கள், கலை மற்றும் அறிவியல் புல முதன்மையர்கள்,தேர்வாணையர், பல்வேறு றை தலைவர்கள், பேராசிரியர்கள், 2000 க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை சீதக்காதி அறக்கட்டளை துணைப்பொது மேலாளர் அல்ஹாஜ் சேக் தாவூத்கான், கலா ,உடற்கல்வி பேராசிரியை மற்றும் மாணவப்பேரவை ஒருங்கிணைப்பாளர்களும் செய்திருந்தனர்.
கீழக்கரை தாசிம் பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் குடியரசு தின விழா
எழுதியவர்: mohan January 26, 2020, 1:34 pm




You must be logged in to post a comment.