இராமநாதபுரம் அருகே மாடக் கொட்டான் கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவி ஜாஸ்மின் தலைமையில் நடந்தது.ஒன்றிய கவுன்சிலர் கா.மனோகரன் துணைத் தலைவர் தமிழரசன்
முன்னிலை வகித்தனர். விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் பாதாள சாக்கடை கழிவு நீரை முறைப்படுத்த வேண்டும். இளைஞர் விளையாட்டு மையம் அமைக்க வேண்டும், இளமனூர், மாடக் கொட்டான் சந்திப்பில் உயர்கோபுர மின் விளக்கு, சமுதாய நலக்கூடம், துணை சுகாதார மையம், கிராம நிர்வாக அலுவலர் கட்டடம், கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இளநிலை உதவியாளர் ஆனந்தி, ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பாரூக் அலி, மெஹராஜ் பானு, மீனாள், ரபீக்கா பேகம், கருப்பையாஉள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் நாகராஜன் நன்றி கூறினார்.
மாடக்கொட்டான் ஊராட்சியில் துணை சுகாதார நிலையம் அமைக்க கிராம சபை கூட்டத்தில் தீர்மானம்
எழுதியவர்: mohan January 26, 2020, 1:15 pm




You must be logged in to post a comment.