17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா..

கீழக்கரை ஹமீதியா தொடக்கப்பள்ளியில் குடியரசு தின விழா..

எழுதியவர்: ஆசிரியர் January 26, 2020, 1:13 pm

ஹமீதியா தொடக்கப்பள்ளியில் இன்று (26/01/2020) தினம் 71வது குடியரசு தின விழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சங்க உறுப்பினர் M.S.A. அஹமது பரீது  தலைமையேற்று தேசியக் கொடியை ஏற்றி வைத்து மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார். அதை தொடர்ந்து சங்க உறுப்பினர்கள் M.S.அஹமது ஜமீல் S.M.K.உமர்தீன், யூசுப் ஆலிம். சங்க மேலாளர் ஜமால், அலும்னி செயலர் கபீர் மற்றும் முன்னாள் மாணவர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வின் சிறப்பம்சமாக பாரம்பரியத்தை நினைவூட்டும் வகையில்  மாணவர்களுக்கு கடலை உருண்டை, கமர்கட்டு, லட்டு போன்ற இனிப்புகள் வழங்கப்பட்டது. மேலும் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டு விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது .

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!