17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராமநாதபுரம் அருகே பேராவூர் கிராம சபை கூட்டம்

இராமநாதபுரம் அருகே பேராவூர் கிராம சபை கூட்டம்

எழுதியவர்: mohan January 26, 2020, 1:11 pm

இராமநாதபுரம் அருகே பேராவூர் ஊராட்சி கிராம சபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி தலைவர் ஜெயலட்சுமி மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய கவுன்சிலர் கா.மனோகரன் (திமுக) முன்னிலை வகித்தார். மழைநீர் சேகரிப்பு, சாலை பராமரிப்பு, முதல்வரின் குடிமராத்து திட்டம், குறுங்காடு மேம்பாட்டு திட்டம் நிறைவேற்றுதல், பிரதமரின்இலவச வீடுமுதியோர் ஓய்வூதியம், அம்மா இரு சக்கர வாகன திட்ட பயனாளிகள் தேர்வு குறித்து விவாதித்து தீர்மானம் நிறைவேற்றது. இளநிலை உதவியாளர் லில்லி கிரேஸ்கிராம சுகாதார செவிலியர் இருளாயி, தொடர்பு பணியாளர் குருவம்மாள், ஊராட்சி உறுப்பினர்கள் ராதிகா கர்ணமுருகன், பாகம்பிரியாள், பாசள்ளி, காளீஸ்வரி, செல்வராணி, சின்னதுரை, ராஜேஷ், வள்ளியம்மாள் மற்றும் பேராவூர், காட்டூரணி, தங்கப்புரம், வைகை நகர், அரிய சுவாமி நகர், எம்ஜிஆர் நகர், தில்லைநாயகபுரம் மக்கள் கலந்து கொண்டனர்.ஊராட்சி செயலர் ச.ஆனந்தி நன்றி கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!