18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-ஆண்கள் பெண்கள் திரளாக பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்-ஆண்கள் பெண்கள் திரளாக பங்கேற்பு

எழுதியவர்: mohan January 26, 2020, 11:18 am

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு, தேசியக் குடியுரிமை பதிவேடு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் பொதுமக்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.தென்காசி மாவட்டம் தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்து செய்யக்கோரி தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி பல ஆயிரக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் , புதிய பேருந்து நிலையம் முன்பு இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். ஆனால் போலீசார் ஊர்வலம் செல்ல அனுமதிக்காததால் பேருந்து நிலையம் முன்பே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக் கோரியும், மத்திய அரசின் போக்கை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களை எழுப்பினர்.தென்காசியில் தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை தொடர்ந்து பேருந்துகள் அனைத்தும் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டது.ஆர்ப்பாட்டம் நடந்த பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போராட்டத்தின் முடிவில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!