18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய வக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

தேசிய வக்காளர் தின விழிப்புணர்வு பேரணி

எழுதியவர்: mohan January 26, 2020, 10:43 am

தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.இந்த பேரணியில் ஏராளமான கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டில்  ஜனவரி 25 ஆம் தேதியான இன்று தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வருவாய்த்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இந்த பேரணியில் 18 வயது நிரம்பிய ஒவ்வொரு குடிமகனும் வாக்களிக்க வேண்டியதன் அவசியம் குறித்து பதாகைகளை ஏந்தி பாலக்கோடு நகரின் முக்கிய பகுதி வழியாக பேரணியாக வந்தனர்.இந்த பேரணியில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு ஏராளமான மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.இந்த விழிப்புணர்வு பேரணியில் பாலக்கோடு வட்டாட்சியர் ராஜா, காவல் ஆய்வாளர் விஸ்வநாதன், தேர்தல் துணை வட்டாட்சியர் ரஜினி, வருவாய் ஆய்வாளர் ஞானதீபன் கிராம நிர்வாக அலுவலர் செல்வம் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!