17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நெல்லையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு விழா-பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

நெல்லையில் தேசிய வாக்காளர் தின உறுதி மொழி ஏற்பு விழா-பள்ளி மாணவ மாணவியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு

எழுதியவர்: mohan January 26, 2020, 10:08 am

ஜன.25 தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு திருநெல்வேலி பேட்டை காமராஜர் நகர்மன்ற மேனிலைப்பள்ளியில் பள்ளி மாணவ, மாணவியர்களின உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி.மர்பி இஸ்ரேல் தலைமை தங்கினார். கதிரவள்ளியம்மாள் முன்னிலை வகித்தார். உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளை முதுகலை பொருளாதார ஆசிரியரும், தேர்தல் கல்வி அறிவு குழு ஒருங்கிணைப்பாளருமான திரு .பொன்னுசாமி சிறப்பாக செய்திருந்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவிகள்,ஆசிரியர்கள் அனைவரும் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். அதில் நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தல்களின் மாண்புகளை நிலை நிறுத்து வோம் என்றும், ஒவ்வொரு தேர்தலிலும், அச்சமின்றியும், மதம்,இனம்,மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும், எந்தவொரு தூண்டுதலின்றியும் வாக்களிப்போம் எனவும் உறுதி மொழி ஏற்கப்பட்டு இனிதே விழா நிறைவுற்றது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!