17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குடியரசு தினத்தை முன்னிட்டு டெம்பிள்டன் ரோட்டராக்ட் சங்கத்துக்கு 25 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி

குடியரசு தினத்தை முன்னிட்டு டெம்பிள்டன் ரோட்டராக்ட் சங்கத்துக்கு 25 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி

எழுதியவர்: mohan January 26, 2020, 9:55 am

மதுரை வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு டெம்பிள்டன் ரோட்டராக்ட் சங்கத்துக்கு 25 கிலோ அரிசி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.இது குறித்து அறக்கட்டளை நிறுவனர் வழிகாட்டி மணிகண்டன் கூறுகையில்:மதுரை டெம்பிள்டன் ரோட்டராக்ட் சங்கத்தின் இளைஞர்கள் வாரம் ஒரு நாள் ஒரு வேளை உணவு என்ற பெயரில் சாலையோரங்களில் வாழும் இயலாதோர்க்கு உணவு வழங்கி வருகிறார்கள்.

அவர்கள் இந்த உன்னதமான பணியை இந்திய குடியரசு தினத்திலும் மேற்கொள்ள இருப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் வழிகாட்டி மனிதர்கள் அறக்கட்டளை சார்பில் 25 கிலோ அரிசி வழங்கப்பட்டது.அச்சங்கத்தின் நிர்வாகிகள் செல்வகுமார், கனிமொழி ஆகியோர் இதனை பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் மாயகிருஷ்ணன், இளஅமுதன், அசோக்குமார், கார்த்திக், கிரேசியஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!