17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடு அருகே அதிகாலையில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவன் பலி, மற்றொரு சிறுவன் படுகாயம்..

கொடைரோடு அருகே அதிகாலையில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவன் பலி, மற்றொரு சிறுவன் படுகாயம்..

எழுதியவர்: Askar January 24, 2020, 3:02 pm

கொடைரோடு அருகே அதிகாலையில் பழனிக்கு பாதயாத்திரை சென்ற முருக பக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சிறுவன் பலி, மற்றொரு சிறுவன் படுகாயம்..

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகேயுள்ள அழகம்பட்டி பிரிவு என்னும் இடத்தில் இன்று அதிகாலை பழனிக்கு பாதயாத்திரையாக சென்ற முருகபக்தர்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் மதுரை மாவட்டம் மேலூர் அருகேயுள்ள பெரிய சூறைக்குண்டை சேர்ந்த 7-ம் வகுப்பு படித்து வரும் தினேஷ் (13) என்ற சிறுவனின் பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றும் ராமர் என்ற சிறுவன் பலத்த காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் தினேஷ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முருக பக்தர்கள் மீது மோதிய வாகனத்தை தேடி வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!